Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
தனுசு ராசியில் புதன் வக்ரமாவதால் டிசம்பர் 13 முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Mercury Retrograde In Sagittarius On December 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக் கூடியவர். மேலும் அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிக்கக்கூடியவர்.
புதனின் நிலையில் சிறு மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதன் தற்போது குருபகவானின் ராசியான தனுசு ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் டிசம்பர் 13 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் வக்ரமாகி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதுவும் புதன் வக்ரமாவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது தனுசு ராசியில் புதன் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சாலேயே பல மோசமான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பழைய நோய்கள் மீணடும் தலைத்தூக்கும். சிறு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரக்கூடும். உறவினர்களுடன் தவறான புரிதல் ஏற்படலாம்.
பேசும் போது வார்த்தைகளில் கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் பிரச்சனைகள் தீவிரமாகிவிடும். அதிகப்படியான செலவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் டிசம்பர் 13 முதல் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் குறையும். செய்யும் வேலையை கூட முழுமையாக செய்து முடிக்க முடியாமல் போகும். உடன் பிறந்தவர்களுடனான உறவு பாதிக்கப்படும்.
சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் பிரச்சனை தீவிரமாகிவிடும். தேவையற்ற பண செலவுகளை சந்திக்க நேரிடும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications