Latest Updates
-
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க..
சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்: ஆகஸ்ட் 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழில் வாழ்க்கை சிறப்பா இருக்கும்...
Mercury Retrograde In Leo On August 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். கிரகங்களிலேயே புதன் மிகவும் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுபவர். இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன் ராசியை மாற்றுவதைத் தவிர, சில சமயங்களில் வக்ர நிலையில் பின்னோக்கியும் பயணிப்பார். பொதுவாக கிரகங்கள் வக்ரமாகும் போது, அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதம் ஏற்படும்.

மேலும் வக்ர நிலையில் கிரகங்கள் மாறும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் வக்ரமாகிறார்.
புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் புதன் வக்ர காலத்தில் திடீர் பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகிறது. ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இதுவரை இல்லாத அளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்படும். பழைய முதலீடுகளால் இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் பரம்பரை சொத்துக்களைப் பெறும் வாய்ப்புக்களும் உண்டு.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். புதிய தொழிலுக்காக வங்கியில் கடன் வாங்க நினைத்தால், அதில் வெற்றி கிடைக்கும். முக்கியமாக புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். மேலும் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications