Latest Updates
-
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்: ஆகஸ்ட் 24 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
Mercury Retrograde In Leo On August 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, பின்னோக்கி அல்லது வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கும்.
இப்படி பின்னோக்கி வக்ர நிலையில் கிரகங்கள் பயணிக்கும் போது, அந்த கிரகங்கள் வலுவிழந்து இருக்கும். மேலும் கிரகங்கள் வக்ரமாகும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் வக்ரமாகவுள்ளார்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இதனால் இந்த புதனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, அது வியாபாரம், படிப்பு, பேச்சு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ரமாகும் புதனின் தாக்கம் ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது சிம்ம ராசியில் புதன் வக்ரமாவதால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனால் மகிழ்ச்சி அடைவார்கள். தடைபட்ட பணம் திரும்ப கிடைக்கும். குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் மற்றும் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். பொருள் இன்பத்திற்காக அதிக பணத்தை செலவழிப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை ஏதேனும் பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அதிலிருந்து விடுபடலாம்.
பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications