Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
Mercury Retrograde In Leo On 24 August 2023: ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே மிகச்சிறிய கிரகம் மற்றும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.
புதன் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ரமாகவுள்ளார். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதம் ஏற்படும்.

மேலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுவும் ஞானம் மற்றும் வியாபாரத்திற்கு காரணமாக புதன் வக்ரமாவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படும். மேலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பேச்சால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புதிய வேலையை தொடங்க நினைத்தால், அதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளுடனான உறவு மோசமடையும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை குறையும். குழந்தைகளால் சில மோசமான செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களின் உறவுகளில் மன கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால், அதில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications