Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மேஷ ராசியில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் 21 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
Mercury Retrograde In Aries On April 2023: ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு, பகுத்தறிவு திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபரின் வியாபாரம் சிறப்பாக இருப்பதோடு, அவரது பேச்சு ஈர்க்கும் வகையில் இருக்கும். இப்படிப்பட்ட புதன் 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ரமாகிறார்.
கிரகங்கள் வக்ரமாகும் போது, அது வலுவிழந்து இருக்கும் மற்றும் அந்த கிரகங்கள் வழங்கவுள்ள நற்பலன்கள் தடைபடும். புதன் மேஷ ராசியில் வக்ரமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் புதன் வக்ரமாவதால் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நன்மைகளையும் பெறவுள்ளார்கள். இப்போது புதன் வக்ரமாவதால் நற்பலனைப் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆளுமை மேம்பட்டிருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையும் இக்காலத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. கூட்டு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். புதன் மிதுன ராசியின் அதிபதி என்பதால் இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வருமானத்தில் அதிகரிப்பைக் காணலாம். இக்காலத்தில் நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க நினைத்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காணக்கூடும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் செய்வர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைக் காண வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications