Latest Updates
-
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
புதன் வக்ரமாவதால் ஏப்ரல் 21 முதல் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க..
Mercury Retrograde In Aries On April 2023: நவகிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 28 நாட்கள் வரை இருப்பார். தற்போது புத்திகாரகனான புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த புதன் ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார். அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். புதன் வக்ரமாவதால், புதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் அனைத்தும் தடைப்படும்.
புதன் இந்த வக்ர நிலையில் மே 15 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், நான்கு ராசிக்காரர்கள் புதன் வக்ரமாவதால் நிறைய கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளார்கள். இப்போது மேஷ ராசியில் வக்ரமாகும் புதனால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டைகள் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உங்கள் வேலையில் சில தடைகளை சந்திக்கலாம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் கடக ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். குடும்ப சூழல் பிரச்சனைகள் நிறைந்து, அமைதியற்று இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரியும் மகர ராசிக்காரர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்களின் செலவுகள் வரவை விட அதிகமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தலைத்தூக்கும். இக்காலத்தில் தேவையில்லாமல் கோபப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், அந்த கோபமே உங்கள் மன உளைச்சலை உண்டாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications