Latest Updates
-
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
வக்ரமாகும் புதனால் ஏப்ரல் 21 முதல் அடுத்த 25 நாட்கள் இந்த ராசிகளுக்கு பிரமாதமா இருக்கப்போகுது...
Mercury Retrograde In Aries on 21 April 2023: நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். கிரகங்களிலேயே புதன் தான் மிகவும் வேகமாக நகரக்கூடியவர். ஒருவரது ஜாதகத்தில் புதனின் நிலை மிகவும் முக்கியமானது. புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் படிப்பில் சிறந்தவராகவும், பேச்சில் வல்லவராகவும், வியாபாரத்தில் சிறந்தவராகவும் இருப்பார். ஜோதிடத்தில் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் புதன் 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ரமாகிறார். இந்த வக்ர நிலையில் புதன் மே 15 ஆம் தேதி வரை இருப்பார். 25 நாட்கள் புதன் வக்ர நிலையில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது மேஷ ராசியில் வக்ரமாகும் புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் அடுத்த 25 நாட்கள் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் வெற்றியையும் வளர்ச்சியையும் காண்பீர்கள். தொழில் ரீதியாக, கடின உழைப்பிற்கான பலன் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகள் தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலை சிறப்பாக இருக்காது. உறவுகளில் கூட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே தகராறு ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக பல தடைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும். தம்பதிகளிடையே மோதல்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிறு உடல்நல பிரச்சனைகளை சந்தித்தாலும், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் தொழில் ரீதியாக நற்பலன்கள் கிடைக்கும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். வியாபாரிகளின் நிலை வலுவாகும் மற்றும் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பல நல்ல வேலை வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும். வியாபாரிகள் நல்ல வெற்றியைக் காண தங்களின் திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நிதி ரீதியாக, அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் அதனால் நல்ல பலனும் கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பாதுகாப்பின்மையை உணரக்கூடும். தொழில் வாழ்க்கை மோசமாக இருக்கக்கூடும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். வியாபாரிகள் லாபம், நஷ்டம் என இரண்டையும் சந்திப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் பிரச்சனைகள் மற்றும் தலைவலியால் அவதிப்படக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளலாம். தந்தையின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்காது. பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் பிரச்சனைகள் வரலாம். உறவுகளைப் பொறுத்தவரை, விட்டுக் கொடுத்து போனால் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் பணியிடத்தில் சில கடினமான பணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகும். மொத்தத்தில் தொழில் ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்காது. வியாபாரிகள் இக்காலத்தில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கடன் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் தொழில் ரீதியாக இக்காலம் அருமையாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும். எனவே பொறுமையாக இருக்க வேண்டும். வீட்டில் நடக்கும் சுப காரியங்களால் சந்தோஷமடைவீர்கள். இக்காலத்தில் தேவையில்லாத செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் தொழில் ரீதியாக, உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு இடையூறை ஏற்படுத்துவார்கள். இதனால் உங்களால் வேலையை சரியாக செய்ய முடியாமல் போகும். வியாபாரிகளால் தினசரி இலக்கத்தை அடைய முடியாமல் போகும். முதலீடு செய்ய இது ஏற்ற காலம் அல்ல. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் வியாபாரிகளுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். ஆனால் நிதி நிலை நன்றாக இருக்காது. எனவே பண விஷயத்தில் கவனமக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் கடினமாக உழைத்தால், பதவி உயர்வைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications