Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மேஷத்தில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாதம் இந்த 3 ராசிக்காரங்க வேலையை இழக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
Mercury Retrograde In Aries On 02 April 2024: ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் 27 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் தொழிலில் கொடி கட்டி பறப்பார், படிப்பில் சிறந்து விளங்குவார், பேச்சால் பல காரியங்களை சாதிப்பார். புத்திசாலியாக இருப்பார். இப்படிப்பட்ட புதன் மார்ச் 26 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் இந்த புதன் ஏப்ரல் 02 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார்.

புதன் வக்ரமாவதால், அவரால் கிடைக்கவிருக்கும் நன்மைகள் தடைபடுவதோடு, பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதுவும் தொழிலில் பிரச்சனைகளையும், பண இழப்புக்களையும் சந்திக்க நேரிடும். இப்போது மேஷ ராசியில் வக்ரமாகும் புதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வேலையில் எந்த பிரச்சனையும் வரக்கூடாதெனில், கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
எந்த வேலையை செய்து முடித்தாலும், ஒருமுறை நன்கு சரிபார்த்துக் கொள்ளுங்கள். நிதியைப் பொறுத்தவரை சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளால் அதிகம் சிரமப்பட நேரிடும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் பண விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் சரிவைக் காணலாம். பொறுமையுடன் எந்த வேலையையும் செய்யுங்கள். நிறைய சவால்களை சந்திக்க நேரிடுவதால் சற்று விரக்தியடையலாம். நிதி ரீதியாக கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திடீரென்று பெரிய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் எந்த செலவுகளை செய்வதாக இருந்தாலும் சிந்தனையுடன் செய்யுங்கள். உறவுகளைப் பொறுத்தவரை, தவறான புரில்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் அலுவலகத்தில் குறையலாம். இக்காலத்தில் வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். கடினமாக உழைத்தாலும் எந்த பாராட்டும் கிடைக்காது. இதனால் மிகுந்த ஏமாற்றமடையக்கூடும். பணிச்சுமை அதிகரிக்கலாம். வியாபாரிகள் தோல்விளை சந்திக்க நேரிடும். நிதியைப் பொறுத்தவரை, வருமானம் சற்று குறையலாம். தேவையற்ற செலவுகளால் பண பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே சற்று கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
