Latest Updates
-
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா?
புதனும் சனியும் நேருக்கு நேர் இருப்பதால், இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Mercury Opposite Saturn: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, வக்ர நிலையிலும், இன்னும் சில சமயங்களில் நேருக்கு நேர் பயணிக்கவும் செய்கின்றன. இப்படி கிரக மாற்றங்களால் மட்டுமின்றி, கிரகங்களின் நிலைகளினாலும், மனித வாழ்க்கையில் பெரிய தாக்கம் ஏற்படக்கூடும்.
அந்த வகையில் புதனும், சனியும் நேருக்கு நேர் பயணிக்கின்றன. அதாவது இவ்விரு கிரகங்களும் 7 ஆம் பார்வையில் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பயணிக்கின்றன. இதன் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்நிலையானது அதிர்ஷ்டத்தை வழங்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் பல வெற்றிகளை வழங்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியில் புதனும் சனியும் சிறப்பான நிலையில் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் வெற்றி பெறும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். குழந்தைகளால் சந்தித்த பிரச்சனைகள் தீரும். சில முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
மிதுனம்
சனியும், புதனும் நேருக்கு நேர் பயணிப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை வழங்கும். முக்கியமாக சனியின் அருளால் பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதனின் நிலையானது பல நன்மைகளை வாரி வழங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதனின் நிலையானது நன்மைகளை வழங்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபத்துடன் முன்னேற்றத்தையும் காண்பார்கள். குறிப்பாக இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications