Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
புதன்-சந்திரன் சேர்க்கையால் ஜூலை 17 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்தில் கொஞ்சம் உஷாரா இருக்கணும்...
Mercury Moon Conjunction On 17 July 2023: வேத ஜோதிடத்தின் படி, சந்திரனும்-புதனும், தந்தையும்-மகனுமாவர் மற்றும் இருவருக்குமிடையே நட்புறவு உள்ளது. புத்திகாரகனான புதன் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 2023 ஜூலை 17 ஆம் தேதி சந்திரனும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கடக ராசியானது சந்திரன் ஆளும் ராசி.
சொந்த ராசியிலேயே சந்திரன் புதனுடன் இணைந்திருப்பதால், இக்காலத்தில் வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சேர்க்கையானது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏற்பட்டிருந்தால், அது அவப்பெயரை ஏற்படுத்தும் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் தூண்டும்.

கடக ராசியில் நிகழும் புதன் சந்திரன் சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில விஷயங்களில் நற்பலனைப் பெற்றாலும், சில விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் சந்திரன்-புதன் சேர்க்கை ஏற்படவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் குணம் மென்மையாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக பேச்சுத் திறன் நன்றாக இருக்கும். இருப்பினும் இக்காலத்தில் தவறான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உங்களை மற்றவர்கள் ஏமாற்றலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நுரையீரல் மற்றும் நரம்பு பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சந்திரன் சேர்க்கை ஏற்படவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் அழகுடன் திகழ்வார்கள். பேச்சு இனிமையாக இருக்கும். புத்திசாலித்தனமாக பேசுவார்கள். நல்ல நடிகராகவோ, கவிஞராகவோ அல்லது பேச்சாளராகவோ ஆக வாய்ப்புள்ளது. ஆனால் நிதி நிலைமை நிலையற்றதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்துடனும், அமைதியற்ற மனதுடனும் இருக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் சந்திரன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கவர்ச்சியான உடலமைப்புடனும், புன்னகையையும் கொண்டிருப்பார்கள். இக்காலத்தில் நல்ல பேச்சாளராக திகழ்வார்ள். மாணவர்கள் படிப்பில் சிரமத்தை சந்திக்க நேரிடும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். பணத்தை சேமிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் பண பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications