Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
புதன் சந்திர சேர்க்கையால் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலமா இருக்கப் போகுது..
Mercury Moon Conjunction: ஜோதிடத்தில், புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய காலத்தில் ராசியை மாற்றுபவர். இந்த புதன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி இரவு 08.23 மணிக்கு சந்திரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் சுமார் 2 1/2 -3 நாட்கள் வரை பயணிப்பார். இதனால் அடுத்த 2 நாட்கள் ரிஷப ராசியில் புதன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது.

சந்திரன் சுக்கிரனின் ராசியில் நுழைந்திருப்பது, நல்ல செல்வ வளத்தைத் தரும். அதுவும் புதனுடன் சந்திரன் இணைந்து பயணிப்பது பல ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். இப்போது எந்தெந்த ராசிக்காரர்கன் புதன் சந்திர சேர்க்கையால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் சந்திர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை, நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் செயல்திறனால் மற்றவர்களுக்கு பிடித்தவராக மாறலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் சந்திர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் தொழிலில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். நிதி நிலையைப் பொறுத்தவரை, நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் சந்திர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் சற்று அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் நல்ல லாபகரமானதாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, இக்காலத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications