Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
புதனால் உருவாகும் தன சாம்ராஜ்ய யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்கள் சில ராசியில் உச்சம் பெற்றும், சில ராசியில் நீசமடைந்தும் இருக்கும். இந்நிலையில் தற்போது மீன ராசியில் புதன் நீசமடைந்துள்ளார். அதோடு புதன் மீனத்தில் அஸ்தமன நிலையிலும் உள்ளார்.
இதனால் மீன ராசியில் புதனால் தன சாம்ராஜ்ய யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது நல்ல பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் தரவுள்ளது. இப்போது புதனால் உருவாகும் தன சாம்ராஜ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தன சாம்ராஜ்ய யோகமானது மங்களகரமானதாக இருக்கும். ஏனெனில் மிதுன ராசியின் அதிபதி புதன். எனவே இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வரும். அரசு வேலை செய்பவர்களுக்கு, இக்காலகட்டம் நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.
ரிஷபம்
தன சாம்ராஜ்ய யோகமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் பொருளார நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். பண வரவு இக்கால கட்டத்தில் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். பழைய முதலீடுகளால் இக்லத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் ஆசைகள் நிறைவேறக்கூடும்.
கன்னி
தன சாம்ராஜ்ய யோகமானது கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளால் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தன சாம்ராஜ்ய யோகமானது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலனைத் தரும். மேலும் புதனின் பார்வை 7 ஆவது வீட்டில் விழுவதால் தொழிலில் நல்ல வருமானத்தைப் பெறக்கூடும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அமையும். இதுவரை தொழில் மந்தமாக இருந்தால், இனிமேல் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

