Latest Updates
-
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகம்: அக்டோபர் 1 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mercury Make Badra Rajyoga On October 2023: ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். புதனின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் 1 வருடத்திற்கு பின் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் அக்டோபர் 01 ஆம் தேதி செல்கிறார். புதன் கன்னி ராசிக்கு செல்வதால் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான பத்ர ராஜயோகத்தை உருவாகிறது.

பத்ர ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த பத்ர யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்று, வெற்றி மேல் வெற்றி காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகமானது சிறப்பான பலன்களை அளிக்கும். அதுவும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிக்கும். இக்காலத்தில் எந்த வேலையை கஷ்டப்பட்டு செய்து முடித்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதன் மூலம் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகமானத நல்ல பலனை வழங்கும். குறிப்பாக இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்துடன், வியாபாரம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பரம்பரை சொத்துக்களால் சில நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல பண ஆதாயத்தைத் தருவதாகவும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகமானது சாதகமான பலன்களை அளிக்கும். முக்கியமாக திடீர் பண ஆதாயம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் இனிமையாகவும் அமைதியாகவும் இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். இக்காலத்தில் பேச்சால் முக்கியமான காரியங்களை சாதிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications