Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகம்: ஜூன் 24 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரமாதமா இருக்கப்போகுது...
Badra Rajyoga On June 2023: வேத ஜோதிடத்தில், கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி.
இந்த புதன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூன் 24 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்கிறார். புதன் மிதுன ராசிக்கு செல்வதால் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான பத்ர ராஜயோகம் உருவாகிறது.

பத்ர ராஜயோகம் மிகவும் மங்களகரமான ராஜயோகமாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளார்கள்.
இப்போது மிதுன ராசிக்கு செல்லும் புதனால் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் அதிக நன்மைகளைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சு மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் ஆளுமை மேம்படும். எழுத்து மற்றும் பேச்சு தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகுந்த வெற்றியைத் தரும் காலமாக இருக்கும். சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த யோக காலத்தில் புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதனின் அருளால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தந்தை மற்றும் குருவின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் எண்ணம் கொண்டிருந்தால், அதற்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் நல்ல லாபத்தைத் தரும் காலமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வெளியூர் பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இக்காலத்தில் அலுவலகத்தில் உங்களின் எதிரிகளை தோற்கடித்து புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கு முயற்சித்தால், விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications