Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புதனால் உருவான நீச்சபங்க ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க திடீர் பணத்தைப் பெறுவாங்க...
தற்போது மீன ராசியில் உருவாகியுள்ள நீச்சபங்க யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த நீச்சபங்க ராஜயோகத்தால் திடீர் பண வரவைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள்.
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் மற்றும் அதன் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் 2023 மார்ச் 16 ஆம் தேதி புதன் மீன ராசிக்குள் நுழைந்தார். மீன ராசியில் புதன் பலவீனமாக இருப்பார். இதனால் புதன் பெயர்ச்சியால் மீன ராசியில் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது.

நீச்சபங்க ராஜயோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகமாகும். இந்த யோகமானது பலவீனமான ஒருவரை வலிமையாக்கி, வெற்றிப் பாதையை நோக்கி செல்ல உதவுகிறது. தற்போது மீன ராசியில் உருவாகியுள்ள நீச்சபங்க யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த நீச்சபங்க ராஜயோகத்தால் திடீர் பண வரவைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த யோகமானது அற்புதமான பலனைத் தரும். அதுவும் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது நற்பலனை வழங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் நன்மைகளைத் தரும். புதிய வேலையைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இக்காலத்தில் அதைச் செய்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். பேச்சு, எழுத்து தொடர்பான துறையில் இருப்பவர்கள் இந்த யோகத்தால் நற்பலனைப் பெறக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நீச்சபங்க ராஜயோகமானது நிதி ரீதியாக சூப்பராக இருக்கும். சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அமையும். இதுவரை வேலையில் இருந்த தடைகள் நீங்கும். பணியிடத்தில் உங்களின் எதிரிகளை சாமர்த்தியமாக வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

