Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
Mercury Direct In Scorpio On 02 January 2024: ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றும். அதுவும் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், படிப்பில், பேச்சில் கெட்டிக்காரராக இருப்பதோடு, வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பார். அப்படிப்பட்ட புதன் இதுவரை வக்ர நிலையில் பயணித்து வந்தார்.

இந்நிலையில் 2024 ஜனவரி 02 ஆம் தேதி, அதாவது இன்று புதன் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். புதன் வக்ர நிலையில் இருந்ததால் இதுவரை அவரால் கிடைக்கவிருந்த நற்பலன் தடைபட்டது.
ஆனால் இன்று புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிலர் எதிர்பாராத நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்ததம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும், புதனும் நண்பர்கள் என்பதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் சிறப்பான பலன்களை அளிப்பார். சிலர் புதிய வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை வாங்கலாம். மேலும் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களையும் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு இன்று முதல் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வழக்கத்தை விட அதிக பணத்தை சேமிக்க முடியும். தாயுடனான உறவு மேம்படும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications