Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
புதன் வக்ர நிவர்த்தி: செப்டம்பர் 16 முதல் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
Mercury Direct In Leo On September 2023: ஜோதிடத்தில் புதன் மிகவும் குறுகிய காலத்தில் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர். மேலும் சூரிய மண்டலத்தில் புதன் சூரியனுக்கு மிகவும் அருகில் இருப்பதால், அடிக்கடி அஸ்தமனமாவார். அதோடு புதன் வக்ர நிலையிலும் பயணிப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் மிகவும் புத்திசாலியாகவும், வியாபாரத்தில் சிறந்தவராகவும், பேச்சாற்றல் கொண்டவராகவும், படிப்பில் கெட்டிக்காரராகவும் இருப்பார்.

ஜோதிடத்தின் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் கன்னி ராசியில் உச்சமாகவும், மீன ராசியில் பலவீனமாகவும் இருப்பார். அதோடு புதன் குரு, சந்திரன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்களுடன் இணைந்திருந்தால், அது நற்பலனையும், அசுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால், கெடுபலனையும் வழங்குவதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட புதன் தற்போது சிம்ம ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில செப்டம்பர் 16 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக பல ராசிக்காரர்கள் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அட்டகாசமான நற்பலனைப் பெறவுள்ளார்கள். அதுவும் நல்ல பண பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். காதலிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு, இக்காலத்தில் நல்ல மரியாதை கிடைப்பதோடு, சாதனைகளையும் புரிவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் குறுகிய பயணங்களை மேற்கொள்ளக்கூடும். இக்காலத்தில் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் நடந்து கொண்டால், அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். முக்கியமாக பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். இந்த பேச்சால் பல முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். ஊடகம், தகவல் தொடர்பு, பேச்சு தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நிறைய லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. மிகுந்த நம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். உங்களின் கருத்துக்களை நன்கு வெளிப்படுத்துவீர்கள். மேலும் உங்கள் கருத்துக்களும் நல்ல பலனைத் தரும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டைப் பெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த நிதி நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முக்கியமாக உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications