Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
சிம்மத்தில் வக்ர நிவர்த்தியாகும் புதன்: செப்டம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்கு பிரகாசமாக இருக்கப்போகுது...
Mercury Direct In Leo On 16 September 2023: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். கிரகங்களிலேயே புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். மேலும் புதன் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
புதன் தற்போது சிம்ம ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், திடீர் பண வரவுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கவுள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரை நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்போருடன் நட்புறவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். முக்கியமாக மன தைரியம் அதிகம் இருக்கும். எப்பேற்பட்ட மோசமான சூழ்நிலையையும் தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் சமாளிப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதி தான் புதன். இந்த புதன் 4 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் அனைத்துவிதமான இன்பங்களையும் பெறக்கூடும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பண ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications