Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
சிம்ம ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்..
Mercury Direct In Leo On 16 September 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே மிகச்சிறியது மற்றும் சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ளது. அதோடு புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். இந்த புதன் சுப கிரகங்களுடன் இணையும் போது அது சாதகமான பலன்களைத் தருவதாக கூறப்படுகிறது. அதுவே அசுப கிரகங்களுடன் இணைந்தால் அல்லது 6,8,12 ஆகிய வீடுகளில் இருந்தால், அது கெடுபலன்களை அளிக்கும்.
ஜோதிடத்தில் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இவர் புத்திசாலித்தனம், வியாபாரம், படிப்பு, பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் தற்போது சிம்ம ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி, அதாவது இன்று புதன் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சிம்ம ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் குடும்ப வளர்ச்சிக்கு அதிக பணத்தை செலவழிப்பார்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவில் அதிக ஆர்வத்தைக் காட்டுவார்கள். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணைக்கு மிகவும் உண்மையாக இருப்பார்கள். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பணிபுரிபவர்கள் புதிய வேலையைத் தேடிக் கொண்டிருந்தார், அவர்களுக்கு இன்று முதல் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கலாம். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்லவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு வெளிநாட்டில் கூட வேலைகளைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வருமானம் சற்று மிதமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சற்று பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்கள் தொழிலில் ஒரு பெரிய வளர்ச்சியைக் காண நினைத்தால், அதை இன்று முதல் காண்பீர்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் மிகவும் ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வேலையை மாற்ற வேண்டிய எண்ணம் இருந்தால், அதை சற்று தள்ளிப் போட அறிவுறுத்தப்படுகிறது. எதிரிகள் இக்காலத்தில் உங்களை வீழ்த்த எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், கவனமாக இருக்க வேண்டும். பணம் நிறைய சம்பாதிக்க முடிந்தாலும், அந்த பணத்தை சேமிக்க முடியாமல் போகும். வாழ்க்கைத் துணையுடன் உறவை மகிழ்ச்சியாக பேண முடியாமல் போகும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வேலை தேடுபவர்களுக்கும், வேலையில் இருப்பவர்களுக்கும் இன்று முதல் சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும் மற்றும் அதிக பணத்தை சேமிக்கவும் முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சவால்களை சந்திக்கக்கூடும். இருப்பினும் முயற்சியால் வெற்றி காண்பார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் விடாமுயற்சியை மட்டுமின்றி, அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டியிருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலமானது சுமாராகவே இருக்கும். வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் உங்களின் திறன் சுமாராக இருக்கும். உங்களால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவை பேண முடியாமல் போகும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்காது. பணப் புழக்கம் மற்றும் சம்பாதிக்கும் திறனானது, வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும். பொறுமையின்மையால், வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். இதன் விளைவாக துணையுடனான பிணைப்பு சற்று மோசமாக இருக்கும்.
கும்பம்
கும்ப கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலமானது தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் நிலையை தக்க வைப்பதோடு, நற்பெயரையும் பெறுவீர்கள். நன்கு பணம் சம்பாதிக்க முடியும் மற்றும் பணத்தை சேமிக்கவும் முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வேலையை திட்டமிட்டு செய்ய வேண்டும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, எதிர்பார்த்த வேலை தேடி வரலாம். பங்குச் சந்தையில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











