Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
புதன் வக்ர நிவர்த்தி: மே 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Mercury Direct In Aries On 15 May 2023: நவகிரகங்களில் புத்திகாரகனாக கருதப்படும் புதன், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். இந்த புதன் மார்ச் மாத இறுதியில் இருந்து மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
மேஷ ராசியில் பயணித்து வரும் போதே, ஏப்ரல் 21 ஆம் தேதி வக்ர நிலையில் மாறி பின்னோக்கி நகரத் தொடங்கினார். இதனால் புதனால் கிடைக்கவிருந்த பலன்களில் தடைகள் ஏற்பட்டன. இந்நிலையில் புதன் மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, மீண்டும் நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.

புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், புதனால் கிடைக்கவிருந்த நன்மைகள் இனிமேல் கிடைக்கவுள்ளது. இப்போது மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுபெறும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிக்கும். செய்யும் காரியங்கள் மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் அதிகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பெற்றோருடனான பிணைப்பு வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். இதுவரை தொந்தரவு செய்து வந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி நிலை மேம்படுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சிறந்த காலம். ஏனெனில் இக்காலத்தில் பல புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எழுத்து தொடர்பான வேலையை செய்து வந்தால், உங்கள் எழுதும் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications