Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கப் போகுது...
Mercury Direct In Aries 2023: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது அல்லது அதன் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புத்திகாரகனான புதன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த புதன் மேஷ ராசியில் 2023 மார்ச் 31 முதல் பயணித்து வருகிறார். அதன் பின் 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இந்த வக்ர நிலையிலேயே அஸ்தமனமாகி, உதயமாகியும் உள்ளார்.

இந்நிலையில் 2023 மே 15 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர் பாதையில் பயணிக்கவுள்ளார். வக்ர நிலையில் கிரகங்களால் கிடைக்கும் நற்பலன்கள் மெதுவாக இருக்கும்.
மே 15 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் புதன் வக்ர நிவர்த்தியால் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக உங்களின் முக்கிய வேலை தடைபட்டிருந்தால், இனிமேல் அது முடிக்கப்படும். வழக்கத்தை விட நம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் நிறைய பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக் நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சில பண வரவுகளைப் பெறலாம். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நிதி ரீதியாக இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் பேச்சு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு, இக்காலம் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தை தரும் காலமாக இருக்கும். ஆனால் ஏழரை சனி நடப்பதால், சனியின் தாக்கத்தைக் குறைக்க, சனி பகவானை மறவாமல் வழிபட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications