Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இன்று முதல் இந்த ராசிகளுக்கு அற்புதமா இருக்கப் போகுது...
Mercury Direct In Aries 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் புதன் இதுவரை வக்ர நிலையில் மேஷ ராசியில் பயணித்து வந்தார். வக்ர நிலையில் கிரகங்கள் பலவீனமாக இருப்பதோடு, கெடுபலன்களை வழங்கும்.
இந்நிலையில் புதன் மே 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாவார். புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் வியாபாரத்தில் சிறந்து விளங்குவதோடு, படிப்பில் சிறந்தவர்களாகவும் இருப்பர்.
தற்போது புதன் வக் நிவர்த்தி அடைந்திருப்பதால், அதன் தாக்கத்தால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் சில மாற்றங்களைக் காணலாம். இப்போது மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்திருப்பதால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்களைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலம் சாதகமாக இருக்காது. அதிக செலவுகள் காரணமாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மனதளவில் இந்த காலம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை இணக்கமாகவும் அமைதியாகவும் இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உங்கள் வேலையை நீங்களே செய்தால், அது உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஓரளவு குறையும். இதுவரை அதிகரித்து வந்த உங்கள் செலவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பழைய நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள், அவர்களில் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். தடைபட்ட உங்களின் வேலைகளும் முடிவடையும். சட்டவிரோத வேலைகள் மற்றும் பந்தயங்களில் இருந்து விலகி இருப்பது, உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பு அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். வருமான அதிகரிப்பால் விருப்பங்களும் நிறைவேறும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். உங்கள் காதல் வலுவடையும். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தொடங்குவீர்கள். வியாபாரிகள் தங்கள் முயற்சிகளிலும் முன்னேற்றம் காண்பார்கள்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களை முழுமையாக ஆதரிப்பார்கள். பெற்றோருடனான உறவுகள் பலப்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடனான உங்கள் உறவு இணக்கமாக இருக்கும். உங்களின் பழைய உடல்நல பிரச்சனைகள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. ஹோட்டல் உணவுகளால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். காதல் உறவுகள் நன்றாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். நீங்கள் யாரையாவது கண்மூடித்தனமாக நம்பினால் நீங்கள் ஏமாந்து போகலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் இடமாற்றம் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் திடீரென்று முடிவடையும் வேலைகள் உங்களுக்கு நன்மைகளைத் தரும். முதலீடுகளிலிருந்து லாபத்தைப் பெறுவீர்கள். உங்களின் தர்க்கத் திறனும் அதிகரிக்கும். பணியிடத்தில் வியக்கத்தக்க வகையில் வெற்றியடைவீர்கள் மற்றும் திடீர் பதவி உயர்வும் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். இந்த காலம் சிறப்பாக இருக்கும், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன்களைப் பெறுவீர்கள். காதல் உறவுகளால் கஷ்டங்கள் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் திருமண வாழ்க்கை நன்மையைத் தரும். துணையின் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஆனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாக்குவாதங்கள் வரலாம். இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். விரும்பிய இலக்குகளை அடைய நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்,
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள், இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் கணிசமாக உயரக்கூடும். செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் டென்ஷனை சந்திக்கலாம். உங்கள் குழந்தைகள் முன்னேற்றத்தைக் காணலாம். நீங்களும் உங்கள் துணையும் முன்பை விட நெருக்கமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். பங்குச் சந்தையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற விரும்பினால் வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். காதல் உறவுகளில், அடிக்கடி சண்டை சச்சரவுகளை சந்திப்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் சொத்து பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்த நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் இடையே வாக்குவாதமோ, தேவையற்ற சச்சரவுகளோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணிபுரிபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல வெற்றி பெறுவீர்கள். உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். நிதி ரீதியாக இக்காலம் நன்றாக இருக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். எந்தவொரு பணியையும் முடிக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் முன்னேற்றத்திற்கு உதவும். உங்களின் சமூக வட்டம் விரிவடையும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களின் முயற்சியால் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். பழைய வாக்குவாதங்கள் மறையும். சமூக ஊடகங்களில் உங்கள் பங்கேற்பு மற்றும் செயல்பாடு அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பேச்சின் மூலம் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். சொத்துக்களை வாங்குவதும் விற்பதும் நல்ல லாபத்தைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











