Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
ரிஷபத்தில் அஸ்தமனமாகியுள்ள புதன்: ஜூன் 25 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Mercury Combust In Taurus On June 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம், கன்னி ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசில் 27 நாட்கள் பயணிப்பார் மற்றும் அடிக்கடி தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் செய்வார்.
தற்போது புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருக்கும். அதுவும் புதன் அஸ்தமனமாவதால் கவனக்குறைவு, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஆனால் ரிஷப ராசியில் அஸ்தமனமாகியுள்ள புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது புதன் அஸ்தமனமாகியிருப்பதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொழிலைப் பொறுத்தவரை சிறப்பான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலைப்பளு குறையும். மன அழுத்தமும் சற்று குறையும் வாய்ப்புள்ளது. போதுமான அளவில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்தமாக தொழில் செய்து வந்தால், அதிக லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். நிதியைப் பொறுத்தவரை, வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம். இந்த பயணம் உங்கள் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து, மன அழுத்தத்தைக் குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications