Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
புதன் அஸ்தமனமாவதால் ஜூன் 3 முதல் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்...
Mercury Combust In Taurus On 03 June 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் தான் புதன். இந்த புதன் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட.
இப்படிப்பட்ட புதன் வருகிற மே 31 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். ரிஷப ராசியில் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே அஸ்தமனமாகவுள்ளார். கிரகங்கள் அஸ்தமனமாவதால் நற்பலன்களை விட கெடுபலன்கள் அதிகம் கிடைக்கும். ஏனெனில் அஸ்தமன நிலையில் கிரகங்கள் வலுவிழந்து இருக்கும்.

எனவே புதன் ரிஷப ராசியில் அஸ்தமனமாவதால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எவ்வித புதிய முதலீடுகளையோ, புதிய வேலைகளையோ தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இப்போது ரிஷப ராசியில் புதன் அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்காது. உங்களின் வேலைகளில் பல தடைகளை சந்திக்க நேரிடும். எரிச்சலுணர்வை அதிகம் சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதையாவதை நினைத்து ஒருவித மன அழுத்தத்தில் இருப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். வேலையை மாற்ற நினைத்தால், அதை தவிர்த்திடுங்கள். வியாபாரத்திலும் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம். அதேப் போல் முதலீடுகளையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். ஏழரை சனி நடப்பதால், 2025 வரை சற்று சுமாராகவே இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏதேனும் ஒருவித ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படக்கூடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். எதிரிகள் உங்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். கடன் சுமை அதிகரிக்கலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எப்போதும் எதையாவது நினைத்து மன அழுத்தத்திலேயே இருக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











