Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
புதன் அஸ்தமனம்: இன்று முதல் அடுத்த 24 நாட்கள் இந்த 4 ராசிக்காரங்க பண பிரச்சனையை சந்திப்பாங்க...
Mercury Combust In Taurus 2023: நவகிரகங்களில் புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் 2023 ஜூன் 07 ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார்.
அதைத் தொடர்ந்து 2023 ஜூன் 19 ஆம் தேதி, அதாவது இன்று ரிஷப ராசியில் அஸ்தமனமானார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருக்கும் மற்றும் அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதம் ஏற்படும்.

ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் புதன், இந்த அஸ்தமன நிலையிலேயே மிதுன ராசிக்குள் ஜூன் 24 ஆம் தேதி நுழைகிறார். அதன் பின் ஜூலை 8 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்து, அதைத் தொடர்ந்து ஜூலை 14 ஆம் தேதி கடக ராசியில் உதயமாகிறார்.
ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் புதனால் 4 ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். குறிப்பாக செலவுகள் அதிகரிக்கும். மேலும் வீட்டில் பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கம். பணியிடத்தில் அல்லது தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் உறவுகள் பாதிக்கப்படும். உறவுகளை சிறப்பாக பேண புரிதல் அவசியம். உங்கள் வாழ்க்கைத் துணையை அதிகமாக கட்டுப்படுத்துவது பிரச்சனைகளை ஏற்படுத்தும். வணிகர்கள் தங்கள் தொழில் மற்றும் வருமானத்தில் சிக்கல்களை சந்திக்கக்கூடும். நிதி நிலை மோசமாக இருக்கும். பணத்தை சேமிக்க முடியாது. எனவே செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் சிம்ம ராசிக்காரங்கள் தங்கள் வாழ்வில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்காது. உங்கள் தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற விரும்பினால், உங்கள் திட்டங்களை மிகவும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்களின் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படலாம். எனவே செலவுகளை கவனித்து, தேவையற்ற செலவுகளைத் தவிர்த்திடுங்கள்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு குறைவாகவே இருக்கும். வாழ்வில் உங்கள் இலக்கை அடைய அதிகம் கஷ்டப்ப வேண்டியிருக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். உங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து சற்று அதிகமாக டென்சனாக வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications