Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
மகர ராசியில் புதன் அஸ்தமனமாவதால் பிப்ரவரி 08 முதல் அடுத்த ஒரு மாதம் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Mercury Combust In Capricorn On 08 February 2024: ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை மாற்றுவதைத் தவிர, சில சமயங்களில் அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். இப்படி கிரகங்களின் நிலைகளில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

தற்போது புதன் தனது நண்பனான சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் பிப்ரவரி 08 ஆம் தேதி மகர ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.
புதன் அஸ்தமனமாவதால் அடுத்த ஒரு மாதம் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது மகர ராசியில் அஸ்தமனமாகும் புதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வேலைகளில் தடைகள் ஏற்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றைப் பெற இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான எந்த முடிவையும் யோசித்து எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்ய நினைத்தால், அதை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணம், குடும்பம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டு வணிகம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் மிகுந்த போட்டியை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் மிகுந்த அழுத்தத்தை உணர்வார்கள். உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். சிலருக்கு நிதி இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள். எந்த ஒரு பெரிய முதலீடுகளை செய்வதையும் தவிர்த்திடுங்கள். பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். இருப்பினும் அலுலகத்தில் சற்று கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உறவுகளைப் பொறுத்தவரை, குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications