Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புதன் அஸ்தமனம்: மே 10 வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலிலும், பணத்திலும் நல்ல பலன் கிடைக்கும்...
Mercury Combust In Aries On April 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம், பேச்சு, எழுத்து ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் ஒருவரது ராசியில் சிறப்பான நிலையில் இருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்திலும் ஒருவர் சிறந்து விளங்குவார்.
நவகிரகங்களில் புதன் வேகமாக ராசியை மாற்றுபவர். மேலும் புதன் அவ்வப்போது ஒரு ராசியில் பயணிக்கும் போது அஸ்தமனமாகி, உதயமாவார். இந்நிலையில் புதன் 2023 ஏப்ரல் 23 ம் தேதி மேஷ ராசியில் அஸ்தமனமானார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் வலுவிழந்து இருக்கும். ஆனால் புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் சில ராசிக்காரர்கள் திடீரென்று நல்ல பண வரவைப் பெறுவதோடு, தொழிலில் பல நல்ல முன்னேற்றங்களையும் காணவுள்ளார்கள்.

அஸ்தமன நிலையில் இருக்கும் புதன் மே 10 ஆம் தேதி மேஷ ராசியில் உதயமாகவுள்ளார். இப்போது மேஷ ராசியில் அஸ்தமனமாகியுள்ள புதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் துறையில் நல்ல வெற்றியைக் காணவுள்ளார்கள். இக்காலகட்டத்தில் நல்ல சம்பளத்துடனான வேலை வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும்.
அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். இக்காலத்தில் தன்னம்பிக்கை நிறைந்து இருப்பதால், உங்களின் இலக்கை சிரமமின்றி எளிதில் அடைவீர்கள். இக்காலத்தில் பொறுப்புக்கள் சற்று அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு வெற்றியுடன், நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.
வியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் எதிரிகளை இக்காலத்தில் வீழ்த்தி வெற்றி காண்பீர்கள். ஆனால் தேவையற்ற செலவுகளால் சற்று அவதிப்படக்கூடும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் மீன ராசிக்காரர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். புதனின் நிலையால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
நிதி நிலை சில சமயங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவில் அட்டகாசமாகவும், சில சமயங்களில் சற்று மோசமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் மோசமான காலத்தில் தன்னம்பிக்கை கைவிடாமல் இருந்தால், அதை சமாளித்துவிடலாம். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

