Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: ஏப்ரல் 04 முதல் இந்த 6 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்...
Mercury Combust In Aries On 04 April 2024: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், தொழில் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் அடிக்கடி ராசியை மாற்றுவதோடு, தனது நிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல வலுவான நிலையில் இருந்தால், அந்நபருக்கு வாழ்க்கையில் அனைத்துவிதமான சுகபோகங்களும் கிடைக்கும். அதுவே மோசமாக அல்லது பலவீனமாக இருந்தால் எதிர்மறையான பலன்களைப் பெறக்கூடும்.

தற்போது புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் ஏப்ரல் 04 ஆம் தேதி மேஷ ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் அஸ்தமனமாவதால் அவரால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடை ஏற்படும். மேலும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இப்போது மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதனால் எந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாவதால், இந்த ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக பணியிடத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியாது. வேலை செய்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையால் அதிருப்தி அடைவார்கள். மேலும் சிலர் வேலையை இழக்கவும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. எதிர்மறை எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூட குறையும். சிலர் பல வகையான சங்கடங்களை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். விடாமுயற்சியுடன் செயல்படுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் வேலையை மாற்றுவதைப் பற்றிய எண்ணம் எழலாம்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் பலவிதமான பிரச்சனைகளை புதன் சந்திக்க வைப்பார். வேலையில் சில தவறுகளை செய்ய நேரிடும். வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பல சவால்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இக்காலம் பிரச்சனை நிறைந்ததாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு மோசமடையும். உங்கள் வேலையில் உங்கள் உயர் அதிகாரி அதிருப்தி அடைவார். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்காது. பணிபுரிபவர்கள் மிகுந்த அழுத்தங்களை சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதிக வேலைப்பளுவால் வேலையை மாற்றுவது பற்றி சிந்திக்கலாம். இக்காலகட்டத்தில் உங்கள் வேலையை முழு கவனத்துடன் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications