Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இந்த 4 ராசி ஆண்கள் காதலிக்கும் போது அவங்க நிஜ முகத்தை காட்டவே மாட்டாங்களாம்..இவங்கள காதலிக்கிறது ரொம்ப ரிஸ்க்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் மிகவும் மர்மமான நபராக இருப்பார்கள். இந்த மர்மமான ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இந்த மர்மமான நபர்கள் பெரும்பாலும் தங்கள் எண்ணங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள், அவர்களின் உண்மையான உணர்வுகளையும் எண்ணங்களையும் யாரும் அறியாதவாறு நடந்து கொள்கிறார்கள.
இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு மர்மமான நபர்களாக இருக்கிறார்களோ அதேயளவிற்கு மிகவும் வசீகரமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் மிகவும் ரகசியமானவர்களாக மற்றும் ரகசியமானவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசி ஆண்கள் ராசிச்சக்கரத்தின் மிகவும் மர்மமானவர்கள். தீவிரமான பார்வை மற்றும் ரகசியத்தை பாதுகாக்கும் திறன் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற அவர்கள், தங்கள் காதலியை வசீகரிக்கும் மற்றும் குழப்பமடையச் செய்யும் ஒரு இரகசிய வசீகரத்தைக் கொண்டுள்ளனர்.
விருச்சிக ராசி ஆண்களின் சக்திவாய்ந்த உணர்ச்சி ஆழம் அவர்களை மிகவும் தனிப்பட்டவர்களாக ஆக்குகிறது. இவர்கள் அவர்களின் மூளைக்குள் தங்களின் ரகசியங்களுக்கென ஒரு தனியிடத்தை ஒதுக்கியிருப்பார்கள். அதனை யாராலும் திறக்க முடியாது.
மீனம்
மீன ராசி ஆண்கள் ஒரு புதிர் போன்றவர்கள், அவர்கள் தங்கள் சொந்த உலகில் அடிக்கடி தொலைந்து போகிறார்கள். கனவுகள் மற்றும் மாயைகளின் கிரகமான நெப்டியூனால் ஆளப்படும் மீன ராசிக்காரர்கள் அவர்களின் ஆழமான, உள்நோக்கம் மற்றும் பெரும்பாலும் தப்பிக்கும் போக்குகள் காரணமாக அவர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
அவர்கள் ராசிச்சக்கரத்தின் கலைஞர்கள் மற்றும் கனவு காண்பவர்கள், நேரடி தொடர்புக்கு பதிலாக ஆக்கபூர்வமான முயற்சிகள் மூலம் தங்கள் ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களாக வெளிப்படுத்தாத வரை அவர்களின் மனதில் இருப்பதை யாராலும் அறிய முடியாது.
கும்பம்
கும்ப ராசி ஆண்கள் தங்கள் அசாதாரண, புதிரான ஆளுமைகளுக்கு பெயர் பெற்றவர்கள். புதுமை மற்றும் கிளர்ச்சியின் கிரகமான யுரேனஸால் அவர்கள் நிர்வகிக்கப்படுகிறார்கள், அவர்கள் அனைத்து விஷயங்களிலும் வழக்கத்திற்கு மாறானவர்களாக இருக்கிறர்கள்.
அவர்களின் எண்ணங்கள் பெரும்பாலும் எதிர்காலம் சார்ந்தவை மற்றும் அவர்களின் நடத்தைகள் கணிக்க முடியாத அளவுக்கு புதிரானதாக இருக்கும், இதனால் அவர்கள் உறவுகளில் விலகியிருப்பவர்களாக அல்லது தனியாக இருப்பவர்களாகத் தோன்றலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் முதல் பார்வையில் மர்மமானதாகத் தெரியவில்லை, ஆனால் அவர்களின் உண்மையான மர்மம் வாழ்க்கையின் சவால்களுக்கு அவர்களின் சிக்கலான அணுகுமுறையில் உள்ளது. ஒழுக்கம் மற்றும் பொறுப்பின் கிரகமான சனியால் ஆளப்படும், மகர ராசிக்காரர்கள் சுய கட்டுப்பாட்டில் எஜமானர்கள் மற்றும் பெரும்பாலும் அது தீவிரமானதாத் தோன்றலாம். அவர்களின் செயல்களுக்கு பின்னால் இருக்கும் காரணங்களையும், மர்மங்களையும் அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
