Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குரு, சூரியன், புதன் சேர்க்கை: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நிறைய லாபம் கிடைக்க போகுது..
Mercury Sun Jupiter Conjunction In Aries On April 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் சீரான இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அப்படி மாறும் போது சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழும். இப்படி கிரகங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் 2023 மார்ச் மாத இறுதியில் புதன் மேஷ ராசிக்குள் நுழைந்தார்.
அதைத் தொடர்ந்து 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். அதன் பின் 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் ஏப்ரல் 22 முதல் மேஷ ராசியில் குரு, சூரியன், புதன் சேர்க்கை நிகழ்கிறது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் சேர்க்கையால் தொழிலில் நல்ல லாபத்தையும், நல்ல அதிர்ஷ்டதையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு, சூரியன், புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் திருமண வாழ்வில் நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள், இக்காலத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் குரு, சூரியன், புதன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையானது வருமான வீட்டில் நிகழ்வதால், வருமானத்தில் பெரிய உயர்வு ஏற்படப் போகிறது. புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். கடின உழைப்பிற்கான முழு பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவதோடு, பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். உங்களின் வங்கி இருப்பில் பணம் அதிகம் சேரும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு, புதன், சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் திறமையால் உயர் அதிகாரிகளை ஈர்ப்பார்கள். இக்காலத்தில் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். செய்யும் காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். ஆனால் சனியின் தாக்கம் இருப்பதால், முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications