மே மாதம் இந்த 5 ராசிக்கார்களுக்கு பண மழை பொழியப் போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?

Finance Horoscope For May 2024 In Tamil: இன்னும் ஓரிரு நாட்களில் மே மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மே மாத கிரக நிலைகளால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. அதில் சில ராசிக்காரர்களுக்கு சூப்பராகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். குறிப்பாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

முக்கியமாக இந்த மே மாதத்தில் சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் பண பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். இப்போது 2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலையும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

May Month Rasi Palan 2024 May 2024 Monthly Finance Horoscope For All Zodiac Signs In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! மே மாதத்தில் நல்ல நிதி வளர்ச்சியைக் காண்பீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் எதிர்பாரா செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்பதால், முடிந்த வரை செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இம்மாதத்தில் கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அது பண நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! மே மாதத்தில் பணத்தை சிறப்பாக நிர்வகிக்க வழிகளை கண்டறிவீர்கள். கடந்த கால முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கடன்களை தீர்க்க முடியும். ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். சேமிப்பைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு அதிகமாகச் செலவழிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆபத்தான முதலீடுகளிலிருந்து விலகி இருங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! மே மாதத்தில் பணத்தை சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி பாதுகாப்பிற்காக புதிய சொத்துக்களை வாங்குங்கள். வரவிருக்கும் பெரிய செலவுகளைத் தவிர்க்க புதிய சேமிப்பு கணக்கைத் தொடங்குங்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அவை உங்களுக்கு நல்ல பலனை அளிக்காது.

கடகம்

கடக ராசிக்காரர்களே! மே மாதத்தில் தேவையற்ற செலவுகளானது கடனை வாங்க வைக்கும். எனவே கவனமாக இருங்கள். குறுக்கு வழிகளில் பணத்தை சம்பாதிப்பதைத் தவிர்த்திடுங்கள். இம்மாதத்தில் உங்கள் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். கடந்த கால முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். ஏற்கனவே பண பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! மே மாதத்தில் கடன் வாங்குவதற்கு முன் ஒப்பந்தங்களை கவனமாக படித்து பார்த்து பின் கையெழுத்திடுங்கள். யாருக்கேனும் கடன் கொடுப்பதாக இருந்தால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மே 10 ஆம் தேதிக்கு பின் நிதி நிலையில் உடனடி முன்னேற்றத்தைத் தரும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகள் உங்கள் சேமிப்பைக் குறைக்கலாம். மொத்தத்தில், நிதி ரீதியாக இம்மாதம் மோசமாகவே இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! மே மாதம் நிலம் அல்லது சொத்து வாங்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத விதமாக செலவுகள் உயரக்கூடும். கடந்த கால முதலீடுகளால் நல்ல வருமானம் கிடைக்கத் தொடங்கும். இதனால் இம்மாதத்தில் ஸ்மார்ட்டாக நிதி முடிவுகளை எடுப்பீர்கள். பல்வேறு ஆதாரங்களில் இருந்து கூடுதல் வருமானத்தைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! மே மாதம் சட்ட விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறலாம். நல்ல வருமானத்தைத் தரும் முதலீடுகளை செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கும். மாத இறுதியில், ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! மே மாதம் கடந்த கால முதலீடுகளில் இருந்து நல்ல லருமானம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு லாபகரமாக இருக்கும். இருப்பினும், இந்த மாதம் உங்கள் செலவுகள் இரட்டிப்பாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். வட்டிக்கு கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். சூதாட்டம் ஆடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது பெரிய பண இழப்பை உண்டாக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்கள் முதலீடுகளை லாபகரமான வருமானமாக மாற்றுவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இருப்பினும், ரியல் எஸ்டேட் முயற்சிகளின் வருமானம் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். கடன் வாங்கும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், பட்ஜெட்டைப் போட்டு பணத்தை செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

மகர ராசிக்காரர்களே! மே மாதம் கணிசமான லாபத்தைப் பெற அற்புதமான வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும். சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ சிறந்த காலமாக இருக்கும். கூடுதலாக புதிய வருமானத்தைப் பெற பல்வேறு வழிகளை யோசித்து முயற்சிகளை மேற்கொண்டு நல்ல பலனைப் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! மே மாதத்தில் கடந்த கால பண பரிவர்த்தனைகளில் இருந்து நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். நன்கு ஆராய்ந்து போட்ட முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் இம்மாதத்தில் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் உங்கள் பட்ஜெட் திட்டங்களை சீர்குலைக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். கடனை நீட்டிக்க முயற்சிக்காதீர்கள். இல்லாவிட்டால் அது பிற்காலத்தில் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். உங்கள் சம்பாதிக்கும் திறனை அதிகரிக்க ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இதுவரை எந்த பலனையும் தராமல் இருந்த வருமான ஆதாரங்கள் இந்த மே மாதத்தில் நல்ல நிதி நன்மைகளைத் தரும். இருப்பினும் ஊக முதலீடுகள் விரும்பிய பலனைத் தராது என்பதால் அவற்றைத் தவிர்த்திடுங்கள். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. புதிய முதலீடுகள் இழப்புக்களை ஏற்படுத்தலாம். எனவே அவசரப்பட்டு எந்த நிதி முடிவுகளையும் எடுக்காதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, April 29, 2024, 17:00 [IST]
Desktop Bottom Promotion