Latest Updates
-
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்!
மே மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நிறைய லாபம் கிடைக்கப்போகுது.. உங்க ராசிக்கு எப்படி?
Career Horoscope For May 2024 In Tamil: 2024 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தில் நுழையவுள்ளோம். கிரகங்களின் நிலைகளால் இம்மாதமானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதுவும் இம்மாதத்தின் தொடக்கத்திலேயே குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் இந்த மே மாதம் குறித்து பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பார்கள்.
மே மாத கிரக நிலைகளின் படி, இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறுவார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில் 12 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மே மாதம் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இம்மாதத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! மே மாதத்தில் தொழிலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக இந்த மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் நீங்கள் எந்த ஒரு முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் கடின உழைப்பையே அழித்துவிடும். முக்கியமாக இந்த மாதத்தில் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி, வேலையில் முழு கவனத்தை செலுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! மே மாதமானது தொழில் ரீதியாக சற்று கவலை நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உங்களால் சரியாக முடிவெடுக்க முடியாது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஆனால் இதில் அப்படியே மூழ்கிவிடாமல், மீண்டு வெளிவந்து, உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சிக்க வேண்டும். இதன் விளைவாக ஒரு நல்ல பலனை இறுதியில் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் ரீதியாக சற்று சிரமமாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வெற்றியை பெற முடியாது. நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில முக்கியமான வேலைகள் பாதியுடன் நின்றுவிடும். மொத்தத்தில் இந்த மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! மே மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் வேலை தொடர்பான ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உடனே கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து முயற்சித்தால், நிச்சயம் வெற்றி பெறலாம். எனவே கடின உழைப்பை கைவிடாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! மே மாதம் தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்து கொள்வார்கள். மேலும் உயர் அதிகாரிகள் உங்கள் நடத்தையால் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் விளைவாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! மே மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் வெற்றி பெற நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர்அதிகாரிகள் உங்களுக்கு எதிராக இருக்கலாம். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், உடன் வேலை செய்வோருடன் சுமூகமான உறவைப் பேண முயற்சிக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆனால் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம், வேலையில் சிறப்பாக செயல்பட்டு, நல்ல வெற்றியைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! மே மாதம் தொழிலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் ஒரு முடிவை வேகமாக எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும். இதன் விளைவாக பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், விரும்பிய வெற்றியைப் பெற முடியாது. அதற்காக முயற்சியை கைவிடாமல், தொழிலில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று விரக்தி அடையவோ, ஏமாற்றமடையவோ வேண்டாம். உங்கள் முயற்சிக்கான பலன் நிச்சயம் விரைவில் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளைப் பெறுகூர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். விரும்பிய வேலை தேடி வரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு இம்மாதத்தில் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications