May 2024 Monthly Horoscope: மே மாதம் இந்த 8 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகுது...

May 2024 Monthly Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் மே மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.

உங்களுக்கு 2024 ஆம் ஆண்டின் மே மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் மே மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மே மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2024 மே மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

May 2024 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! மே மாதம் வேலையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இருப்பினும் பணியிடத்தில் ஈகோவை தவிர்த்து, சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி ரீதியாக, சவாலாக இருக்கும். திடீர் செலவுகள் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு போன்றவற்றை நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். காதலிப்பவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்யும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! மே மாதமானது உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுபெறும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். கடினமான வேலையையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மாதத்தின் நடுப்பகுதியில் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். வணிகர்களுக்கு மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக, இம்மாதத்தில் வருமானம் நன்றாக இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகமாக இருக்கும். இதனால் இம்மாதத்தில் கடன் வாங்க வேண்டியிருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது, ​​உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் திருமண வாழ்க்கை நரகமாகிவிடும். வெளியில் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! மே மாதத்தில் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உடன் வேலை செய்வோருடனான ஒருங்கிணைப்பு மோசமடைய வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும். வேலையில் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பணம் பெறலாம். இதனால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாக மாறும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் பதவியைப் பெறலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்க நீண்ட நாட்களாக கடினமாக உழைத்துக்கொண்டிருந்தால், இம்மாதத்தில் நல்ல செய்தியைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவாக்ள். வணிகம் இன்னும் முன்னேறும். இந்த மாதம் உங்களுக்கு நிதி ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நீங்கள் புதிய வருமானம் பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. இருப்பினும், சிந்தனையுடன் செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! மே மாதம் பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இடமாற்றத்தை விரும்பினால், இம்மாதத்தில் அந்த ஆசை நிறைவேறும். அரசு வேலை செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். மாதத்தின் நடுப்பகுதியில் வேலைச்சுமை திடீரென அதிகரிக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல், வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். உங்கள் வேலை இரண்டு மடங்கு வேகமாக முன்னேறும். மேலும் நீங்கள் விரும்பிய லாபத்தையும் பெறுவீர்கள். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டுச் செலவுகள் கூடும். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தால், இந்த மாதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உறவுகளில் நல்ல இணக்கம் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்களுக்கு எதிராக பல தடைகளை உருவாக்குவார்கள். முக்கியமாக பணியிடத்தில், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்படாதீர்கள் மற்றும் முக்கிய முடிவுகளை நீங்களே எடுங்கள். இந்த மாதத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரம் செய்தால், இந்த மாதத்தில் நீங்கள் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நிலவும் மந்தநிலை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். இது தவிர, உங்கள் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நிதி ரீதியாக இந்த மாதம் உங்களுக்கு பலவீனமாக இருக்கும். தொடர்ச்சியான செலவுகள் அதிகரிப்பதால், உங்கள் நிதி நிலையில் கடுமையான சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பினாலும் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. பண விஷயத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சருமம் அல்லது இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! மே மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். வேலையில் மாற்றத்தை விரும்பினால், இம்மாதத்தில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால் நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாதத்தில், நீங்கள் சில சட்ட விஷயங்களில் சிக்கிக்கொள்ளலாம். மாதத்தின் நடுப்பகுதியில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! மே மாதம் பணிபுரிபவர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த மாதம் லாபகரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், நீங்கள் வெற்றி பெறலாம். பண விஷயத்தில் மே மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணவரவு இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். சொத்து தொடர்பான சில நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பும் உள்ளது. அதிக வேலை காரணமாக, குடும்பத்திற்கு போதுமான நேரம் கொடுக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உறவுகளில் கசப்பு அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இருப்பினும், உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! மே மாதம் பணிபுரிபவர்களுக்கு சவாலாக இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்வதில் ஆர்வம் குறையும். இது தவிர, உங்களுக்கு உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். கூட்டு வணிகம் செய்பவர்கள், கூட்டாளருடன் சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, உங்கள் முக்கிய வணிக முடிவுகளை நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். மே 10ம் தேதிக்கு பிறகு உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மூதாதையர் சொத்துக்களை விற்க விரும்பினால், அவசரப்பட வேண்டாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட, நீங்கள் ஒரு நல்ல தினசரி வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்

மகரம்

மகர ராசிக்காரர்களே! மே மாதம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. சக ஊழியர்களை அதிகம் நம்பாமல் இருந்தால் நல்லது. வணிகத்துடன் தொடர்புடையவர்கள் பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், பண விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். முதலீடுகள் போன்றவற்றைச் செய்வதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டும். எந்த விதமான ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகள் ஏதேனும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், உங்களுக்கு சாதகமாக முடிவு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காது தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! மே மாதம் வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலையில் சுமை அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் வார்த்தைகள் உங்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம். எதுவாயினும் வேலையை விடாமுயற்சியுடன் செய்ய முயற்சிக்க வேண்டும், மேலும் தவறுகளைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். இந்த மாதத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். புத்திசாலித்தனமாக செயல்பட்டால், வரவிருக்கும் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தேவையில்லாத விஷயங்களுக்கு வீணாக்குவதை தவிர்க்கவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தேவையில்லாமல் கவலைப்படுவதைத் தவிர்த்திடுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! மே மாதத்தின் தொடக்கமானது வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்காது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மாதத்தின் நடுப்பகுதியில் ஓரளவு நிம்மதி கிடைக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் லாபம் சம்பாதிக்க சில வாய்ப்புகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். கடின உழைப்பின் அடிப்படையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஆனால் உங்கள் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் பிரச்சினைகள், தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Story first published: Wednesday, May 1, 2024, 10:31 [IST]
Desktop Bottom Promotion