Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
மே மாசம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
May 2024 Lucky Zodiac Signs In Tamil: ஒவ்வொரு மாதத்தில் நுழையும் போதும், அந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில் மே மாதத்தின் தொடக்கத்தில், அதாவது மே 01 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. அதன் பின் மே 3 ஆம் தேதி குரு அஸ்தமனமாகவுள்ளார். பின்னர் புதன், சூரியன் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மே மாதமானது இனிமையாக இருக்கும். இந்த மாதத்தில் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்கலாம். நிதி நிலை மேம்படும். நிறைய செல்வத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக இம்மாதம் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளன. வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் திறமையால் சவால்களை திறம்பட சமாளிப்பீர்கள். மேலும் இம்மாதத்தில் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலையைப் பொறுத்தவரை நல்ல பலன்கள் கிடைக்கும். ஒப்படைக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மொத்தத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை பிஸியாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளன. பணியிடத்தில் நல்ல உதவி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளன.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதமானது அற்புதமாக இருக்கும். இம்மாதத்தில் நிதி நிலைமை சாதகமாக இருக்கும். செலவுகளை திறம்பட கட்டுப்படத்துவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழில் ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த மாதத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காதல் உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications