Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
May Horoscope 2023: மே மாசம் இந்த ராசிக்காரர்களின் நிறைய ஆசைகள் நிறைவேறப் போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
May Horoscope 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் மே மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் மே மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?
கீழே 12 ராசிக்காரர்களும் மே மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மே மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 மே மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! மே மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு இம்மாதம் ரிலாக்ஸாக இருக்கும். வணிகர்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் காணப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பர புரிதல் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! மே மாதம் காதலிப்பவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதற்காக அவசரமாக எந்த நிதி பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம். வேலையைப் பொறுத்தவரை, கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. இம்மாதத்தில் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வீட்டின் சூழவை அமைதியாக வைத்திருக்க, சில விஷயங்களை புறக்கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இம்மாதத்தில் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! மே மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு நன்றாக இருக்காது. சில குழப்பங்களால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். வியாபாரம் செய்பவர்கள் எந்த ஒரு புதிய வேலையை தொடங்கும் முன் அல்லது பெரிய முதலீடுகள் செய்யும் போது அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். நிதியைப் பொறுத்தவரை, நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அவ்வளவு சிறப்பாக இருக்காது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! மே மாதம் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபவர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு, இம்மாதம் கடினமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைந்த மாதமாக இருக்கும். புதிய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, உங்களின் தினசரி வழக்கத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! மே மாதம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் இதுவரை தங்கள் வேலையில் தடையை சந்தித்தால், இம்மாதத்தில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். சொத்துகளால் பெரிய லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற கோபம் உங்கள் உறவுக்கு நல்லதல்ல. மாத இறுதியில் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! மே மாதத்தில் வேலை செய்பவர்கள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்துவிட வேண்டாம். மற்றவர்கள் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் இம்மாதத்தில் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இம்மாதத்தில் குடும்பத்தினருக்கு போதுமான நேரத்தை கொடுக்க முடியாமல் போகலாம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையுடன் உங்கள் ஆரோக்கியத்தையும் முழுமையாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! மே மாதம் வேலையைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமானதாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! மே மாதமானது வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். இந்த பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் சற்று குறையக்கூடும். கவனமாக இல்லாவிட்டால் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். இம்மாதத்தில் நிதி நிலையை வலுப்படுத்த, சில பெரிய மற்றும் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிறு விஷயங்களுக்காகவும் அதிகம் கோபப்படுவீர்கள். நிறைய வாக்குவாதத்திலும் ஈடுபடுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை, இம்மாதம் முக்கியமானதாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல பலன் கிடைக்கும். செலவு செய்யும் போது, நிதி நிலையை மனதில் வைத்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மாத இறுதி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் நெருங்கிய நண்பரின் உதவியால், உங்கள் பெரிய பிரச்சனை முடிவுக்கு வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மே மாதத்தில் நீங்கள் உங்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களின் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே செய்து முடிக்கப்படும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு வேலைக்காக கடினமாக உழைத்தால், இந்த மாதம் உங்கள் விருப்பம் நிறைவேறும். இறக்குமதி ஏற்றுமதி தொடர்பான வேலைகளைச் செய்தால், இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மே மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு அபரிமிதமான பொருளாதார லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற செலவுகள் உங்கள் சேமிப்பைக் கரைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! மே மாதம் பணிபுரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு சற்று கடினமாக இருக்கும். நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். பண பிரச்சனையால் பல முக்கிய பணிகள் முழுமையடையாமல் இருக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை பதற்றம் நிறைந்து இருக்கும். நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக பொறுப்புகளால் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications