Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மே மாசம் இந்த ராசிக்காரங்க ஆரோக்கிய விஷயத்துல கொஞ்சம் உஷாரா இருக்கணும்... உங்க ராசிக்கு எப்படி?
May 2023 Monthly Health Horoscope: ஒருவரது ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான், எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்ய முடியும். அதுவும் தற்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான இலக்குகள் பணிபுரியும் இடத்தில் கொடுக்கப்படுகின்றன. இந்த இலக்குகளை அடைய வேண்டுமானால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.
ஒருவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதன் மூலம், வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணலாம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் மே மாதத்தில் நுழைந்துள்ளோம்.

இந்த மே மாதம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே மே மாதம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆரோக்கியமும் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மே மாதம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். ஆனால் போக போக சற்று சிரமமாக இருக்கும். வேலைப்பளு அதிகரிப்பதன் காரணமாக, உங்களால் உங்களுக்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போகும். ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படும். மனதளவில் சிரமப்படுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்க, உணவிலும், ஓய்விலும் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! சில நாட்களாக நீங்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த மாதத்தில் சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள். அலட்சியமாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள். சிறு ஆரோக்கிய பிரச்சனைக்கும் மருத்துவரை அணுகுங்கள். செலவுகள் குறைய வேண்டுமானால், ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! மே மாதத்தில் உணவுகளால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாதத்தின் தொடக்கம் சற்று மோசமாக இருந்தாலும், படிப்படியாக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிக வேலையை இழுத்துப் போட்டு செய்யாதீர்கள். தேவையில்லாத கவலைகளில் இருந்து விலகி இருங்கள். மன ரீதியாகவும் வலுவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! மே மாதம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். உங்கள் மன அழுத்தம் குறையக்கூடும். இதுவரை ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனையை சந்தித்து வந்தால், இம்மாத்தில் நிவாரணம் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! மே மாதத்தில் தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களுக்காகவும் போதுமான நேரத்தை செலவிடுங்கள். அவ்வப்போது சிறு இடைவெளியை எடுங்கள். கெட்ட பழக்கங்கள் இருந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். யோகா, தியானம் போன்வற்றில் தினமும் ஈடுபடுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! மே மாதத்தில் தேவையில்லாத விஷயங்களை நினைத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். ஆனால் சரியான சிகிச்சையை மேற்கொண்டால், இந்த பிரச்சனை நீங்கி, மிகவும் நன்றாக உணருவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இதுவரை உங்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் இருந்தால், இம்மாதத்தில் அப்பிரச்சனை இன்னும் அதிகரிக்கும். உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வெளி உணவுகளை உண்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! மே மாதம் உங்களுக்கு மிகவும் சோர்வாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். சிறு விஷயங்களுக்கெல்லாம் கோபம் வரலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உங்களின் வழக்கத்தில் பெரிய மாற்றங்களை செய்வீர்கள். இதுவரை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இம்மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். சரியான நேரத்தில் சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், நோயின்றி வாழ்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மே மாதம் சாதகமாக இருக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் நீங்கள் முழுமையாக கவனித்துக் கொள்ள நேரம் கிடைக்கும். சிந்திக்காமல் எந்த மருந்தையும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் வயதானவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், இந்த காலகட்டத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள், இல்லையெனில் பெரிய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் பல கவலைகளால் சூழப்படுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். உங்களின் ஆற்றலும் சிறப்பாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதையாவது நினைத்து கவலைப்பட்டு கொண்டிருந்தால், இந்த மாதம் உங்கள் பிரச்சனை தீரும். மனதளவில் நன்கு உணர்வீர்கள். ஓய்வு எடுக்க போதுமான நேரம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications