Latest Updates
-
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
செவ்வாய் உருவாக்கும் ருச்சக யோகம்: ஜூன் 01 முதல் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Mars Will Make Ruchaka Yog On June 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் வருகிற ஜூன் 01 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் சொந்த ராசியில் நுழைவதால் ருச்சக யோகம் உருவாகவுள்ளது.
ஜோதிடத்தில் ருச்சக யோகம் ஒரு மங்களகரமான ராஜயோகமாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அதோடு நிதி நிலையில் முன்னேற்றமும், தொழிலில் நல்ல வெற்றியையும் பெறக்கூடும். இப்போது செவ்வாய் உருவாக்கும் ருச்சக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

விருச்சிகம்
ருச்சக யோகமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஏனெனில் விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக நடந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல நிதி நன்மைகளைப் பெறக்கூடும். வங்கி இருப்பு இருமடங்காக அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்களின் எதிரிகளை வெல்வீர்கள்.
தனுசு
ருச்சக யோகமானது தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். ஏனெனில் தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். காதல் உறவு சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும்.
கடகம்
ருச்சக யோகமானது கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். ஏனெனில் கடக ராசியின் 10ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பைப் றெலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications