Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
செவ்வாய், சுக்கிரன், புதன் சேர்க்கை: ஜூலை 25 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Mars Venus Mercury Conjunction In Leo 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வவ்போது ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும். அப்படி நிகழும் போது அந்த சேர்க்கையால் யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து சுக்கிரன் ஜலை 07 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் ஜூலை 25 ஆம் தேதி புத்திகாரகன் புதனும் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் சிம்ம ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சிம்ம ராசியில் உருவாகும் இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறப் போகிறது மற்றும் அவர்களின் செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகிறது. புதிய வருமானங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். முக்கியமாக பதவி உயர்வு கிடைக்கலாம். அதோடு சம்பள உயர்வையும் பெறலாம். இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நல்ல பண வரவு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமையை அதிகரிக்க பல வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும். இக்காலத்தில் உங்களின் பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்குகிறது என்றே கூறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் தங்கள் நிலையை முன்னேற்ற பல வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் உங்களின் செயல்திறனால் உயர்அதிகாரிகள் மகிழ்ச்சியடைவார்கள். உங்களுக்கு நிறைய பொறுப்புக்களை வழங்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் தந்தையின் ஆதரவும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications