Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
50 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் நிகழும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Mars Venus Mercury Conjunction 2024 In Capricorn After 50 Years: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கங்கள் மற்றும் நிலைகள் மனித வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதை தீர்மானிக்கின்றன. அதுவும் கிரகங்களின் இயக்கங்களின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும்.
அப்படி உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 50 ஆண்டுகளுக்கு பின் மகர ராசியில் கிரகங்களின் இளவரசனான புதனும், கிரகங்களின் தளபதியான செவ்வாயும், செல்வத்தின் காரணியான சுக்கிரனும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இதனால் மகர ராசியில் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இப்படியான நிகழ்வு பிப்ரவரி மாதத்தில் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், இந்த அபூர்வ நிகழ்வால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். எதிர்பாராத வகையில் பணத்தைப் பெறக்கூடும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தை இக்காலத்தில் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் தந்தையால் மற்றும் பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். சிலர் புதிய வணிக ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











