20 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் செவ்வாய்-சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட போகுது!

Mars Venus Conjunction In Leo 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நகர்வுகள் மனித வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டதை தீர்மானிக்கின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது சில சமயங்களில் ஒரே ராசியில் கிரகங்களின் சேர்க்கை நிகழும்.

நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுழுவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாக கருதப்படுகிறார். வருகிற ஜூலை 01 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்கிறார். அதே வேளையில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.

Mars Venus Conjunction In Leo 2023: These Zodiacs Will See Growth In Career After 20 Years In Tamil

இந்த சுக்கிரன் ஜூலை 07 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். இதனால் ஜூலை 07 அன்று சிம்ம ராசியில் செவ்வாய்-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இந்த நிகழ்வானது 20 ஆண்டுகளுக்கு பின் ஏற்படுகிறது. இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள்.

இப்போது 20 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் நிகழும் செவ்வாய்-சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய்-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பழைய முதலீடுகளால் இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும் மற்றும் அந்த தொழிலும் லாபகரமாக நடக்கும்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய்-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் உங்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளின் வியாபாரம் மிகச்சிறப்பாக நடக்கும்.

காதலிப்பவர்களுக்கு இக்காலம் மிகச்சிறப்பாக இருக்கும். காதல் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய்-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் நிதி ரீதியாக இக்காலம் மிகச்சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சின் தாக்கம் இக்காலத்தில் சற்று அதிகமாக இருக்கும். உங்கள் பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள்.

வெளிநாட்டில் வேலை அல்லது படிக்க விரும்பினால், உங்களின் ஆசை இக்காலத்தில் நிறைறே வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மார்கெட்டிங், ஊடகம், கலை துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகச்சிறப்பான மற்றும் முன்னேற்றத்தைத் தரும் காலமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, June 23, 2023, 9:36 [IST]
Desktop Bottom Promotion