Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
20 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் நிகழும் செவ்வாய் சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Mars Venus Conjunction In Leo 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் உருவாகும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஜூலை 01 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ஜூலை 07 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.

இதனால் ஜூலை 07 ஆம் தேதி சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிர சேர்க்கை உருவாகிறது. இந்த சேர்க்கையானது 20 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையால் திடீர் பண வரவும், அதிர்ஷ்டம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் இந்த சேர்க்கை உருவாகிறது. இதனால் இக்காலத்தில் திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை செய்ய விரும்பினால், இக்காலத்தில் அது நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மார்கெட்டிங், ஊடகம் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் இந்த சேர்க்கை உருவாகிறது. இதனால் இக்காலத்தில் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் இந்த சேர்க்கை உருவாகிறது. இதனால் இக்காலத்தில் உங்களின் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை வலுபெறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். இக்காலத்தில் புதிய தொழிலை தொடங்கினால், நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications