Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
செவ்வாய்-சுக்கிர சேர்க்கை: மே 30 முதல் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Mars Venus Conjunction In Cancer 2023: வேத ஜோதிடத்தில் எப்படி கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேப் போல் கிரகங்களின் சேர்க்கையும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் துணிச்சல் மற்றும் வீரத்திற்கு காரணியாகவும், கிரகங்களின் படைத்தளபதியாகவும் கருதப்படும் செவ்வாய் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 30 ஆம் தேதி ஆடம்பரம், காதல், அழகு, செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், கடக ராசிக்குள் நுழைகிறார்.

இதனால் கடக ராசியில் செவ்வாய்-சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. சுக்கிரன் இந்த கடக ராசியில் ஜூலை 07 ஆம் தேதி வரை இருப்பார். கடக ராசியில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்ந்திருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
இருப்பினும் 5 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது கடக ராசியில் நிகழும் செவ்வாய் சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் குடும்பத்தின் வசதியை கவனித்துக் கொள்வீர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சௌகரியத்திற்காக பல வேலைகளை செய்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் இனி கைக்கு வந்து சேரும். மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மனம் அமைதியாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நல்ல மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், போட்டித் தேர்வில் நல்ல வெற்றியைக் காணும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த சேர்க்கை வாழ்வில் நல்ல பலன்களை அளிக்கும். காதல் வாழ்க்கையில் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவடையும். இதனால் எதிர்காலத்தில் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் உறவுகள் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை காதல் நிறைந்து இருக்கும். அதே சமயம் தொழில் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











