Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் தனசக்தி யோகம்: பிப்ரவரியில் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது!
Mars Venus Conjunction 2024 Make Dhan Sakthi Yog In Capricorn: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் இணைவதால் உருவாகும் யோகம் தான் தனசக்தி யோகம்.

இந்த தனசக்தி யோகம் ஒரு மங்களகரமான யோகம். இந்த யோகமானது பிப்ரவரி மாதத்தில் உருவாகவுள்ளது. அதுவும் சனி பகவானின் ராசியான மகர ராசியில் இந்த சுப யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் பெறவுள்ளார்கள்.
ஜோதிடத்தின் படி, பிப்ரவரி 12 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் நுழையவுள்ளார். இதனால் இந்த யோகமானது பிப்ரவரி 12 முதல் மார்ச் 7 வரை நீடித்திருக்கும். இப்போது தனசக்தி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் தனசக்தி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல கவனத்தை செலுத்தினால், அபரிமிதமான லாபத்துடன் நல்ல வெற்றியையும் பெறலாம். இந்த யோகத்தால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. உறவுகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் தனசக்தி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நன்மைகளைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்கை எளிதில் அடைவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
புதிதாக தொழில் தொடங்க நினைத்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக பொழுதைத் கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக வீட்டில் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் தனசக்தி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சுக்கிரனால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நிதி நிலை வலுபெறும். புதிய வருமான ஆதாரங்கள் இக்காலகட்டத்தில் உருவாகும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications