Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கையால் மே 30 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்...
Mars Venus Conjunction 2023: ஜோதிடத்தில் கிரகங்களின் படைத்தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர். இந்த செவ்வாய் மே மாதம் 10 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்தார். இந்த கடக ராசியில் செவ்வாய் ஜூலை 01 ஆம் தேதி வரை இருப்பார்.
அதே சமயம் 2023 மே 30 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரன் அழகு, காதல், செல்வம், செழிப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் கடக ராசிக்குள் நுழையும் போது, ஏற்கனவே இந்த ராசியில் செவ்வாய் இருப்பதால், சுக்கிர செவ்வாய் சேர்க்கை கடக ராசியில் உருவாகிறது.

இந்த சேர்க்கையானது ஜூலை 01 ஆம் தேதி வரை இருப்பதால், இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பயணங்களுக்காக நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.
தேவையில்லாத பயணங்களால் உங்களின் நேரம் வீணடிக்கப்படுவதோடு, உடல் சோர்வும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு வேலையை மாற்றும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் ஆனால் அது சிறப்பாக இருக்காது. தெரியாத ஒரு பெண்ணால் உங்களின் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு சற்று வேதனைகளைத் தரக்கூடியதாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் திருமண வாழ்க்கை சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.
இக்காலத்தில் பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது பிரச்சனைகளை உண்டாக்கும். மொத்தத்தில், இந்த இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் ஒரு பெண்ணால் அவமானப்படுத்தப்படலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
அரசு வேலை செய்பவர்கள் இக்காலத்தில் தங்கள் வேலையில் தாமதத்தை சந்திக்க நேரிடும். முதலீடு செய்ய நினைத்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications