Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் தனசக்தி யோகம்: இந்த 3 ராசியின் தலைவிதி பிரகாசிக்கப் போகுது..
Mars Venus Conjunction 2023 Make Dhan Sakthi Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் அல்லது கிரக சேர்க்கைகள் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் இந்த ஆண்டில் நிகழாத ஒரு யோகம் உருவாகிறது. அதுவும் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் இது உருவாகிறது.
அதுவும் விருச்சிக ராசியில் நிகழும் இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் இது உருவாகவுள்ளது. விருச்சிக ராசியில் ஏற்கனவே செவ்வாய் பயணித்து வருகிறார். சொந்த ராசியில் செவ்வாய் பயணிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் டிசம்பர் 25 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.

சுக்கிரன் விருச்சிக ராசியில் நுழைவதால், அந்த ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் தன சக்தி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் ஒரு மங்களகரமான யோகம். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சுப யோகத்தால் அற்புதமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் தன சக்தி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இதுவரை குடும்பத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனை இந்த யோக காலத்தில் நீங்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சுக்கிரனின் அருளால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்தால் நல்ல பண பலன்கள் கிடைக்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் தன சக்தி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு, முடிக்கவும் முடியும். உடன் பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை வழங்கலாம். புதிய வாகனம், வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் தன சக்தி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காணலாம்.
நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். ஆனால் அதே வேளையில் செலவுகளும் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications