Latest Updates
-
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் மகா தரித்திர யோகம்: ஜூன் 1 முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Mars Transit Make Maha Daridra Yog: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அதுவும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
தற்போது செவ்வாய் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் ஜூன் 01 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். இதனால் இதுவரை உருவாகியிருந்த அங்காரக யோகம் நீங்கி, மகா தரித்திர யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது அசுப யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு உட்பட பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது மகா தரித்திர யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
தரித்திர யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் வரக்கூடும். செய்யும் வேலைகளில் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். ஆனால் அதே சமயம் நிறைய செலவுகளை சந்திப்பீர்கள். ஆரோக்கிய விஷயத்திலும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தரித்திர யோகமானது தீங்கை விளைவிக்கும். சிறு வேலைகளுக்காக கூட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியாமல் போகும். வேலையில் இருந்து உங்களின் கவனம் திசைதிருப்படலாம். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் அதிகரிக்கலாம். வியாபாரிகள் இக்காலத்தில் எந்த விதமான முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் இக்காலம் போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தரித்திர யோகமானது சிறப்பாக இருக்காது. இந்த யோக காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையை செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உறவுகளில் கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் தேவையில்லாமல் கோபப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தரித்திர யோகமானது நன்றாக இருக்காது. இந்த யோகத்தால் நிறைய பணம் கைக்கு வந்தாலும், ஒரு பைசா கூட சேமிக்க முடியாது. தேவையற்ற செலவுகளால் அதிகம் சிரமப்படுவீர்கள். பணியிடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒதுரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்த பின் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எவ்விதமான முதலீடுகளையும் செய்யும் முன் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தரித்திர யோகமானது மோசமான பலன்களை வழங்கும். இக்காலத்தில் எந்த வேலையை செய்தாலும் அதில் தடைகளை சந்திக்க நேரிடும். பண பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தத்தையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது பண இழப்பை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications