Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
செவ்வாய் பெயர்ச்சியால் ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Mars Transit In Virgo On August 2023: வேத ஜோதிடத்தில், கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், கோபம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் செவ்வாய் ராசியை மாற்ற 2 மாத காலம் ஆகும்.
அந்த வகையில் தற்போது செவ்வாய் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் ஆகஸ்ட் 18 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகிறார். இந்த கன்னி ராசியில் செவ்வாய் அக்டோபர் 03 ஆம் தேதி வரை இருப்பார்.

செவ்வாய் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் கன்னி ராசிக்கு செவ்வாய் செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும்.
இப்போது கன்னி செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கவும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் திட்டங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். நிலம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மொத்தத்தில் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத நல்ல பண வரவைப் பெறக்கூடும். இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications