Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்!
கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய்: அக்டோபர் வரை இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்...
Mars Transit In Virgo On August 2023: நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், கோபம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல தைரியசாலியாக, எதையும் துணிந்து செய்யக் கூடியவராக, எதற்கும் அஞ்சாதவராக இருப்பார். இப்படிப்பட்ட செவ்வாய் 2 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அந்த வகையில் செவ்வாய் சமீபத்தில், அதாவது ஆகஸ்ட் 18 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்த கன்னி ராசியில் செவ்வாய் அக்டோபர் வரை பயணிப்பார். கன்னி ராசியில் செவ்வாய் நுழைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு மோசமான மற்றும் பல பிரச்சனைகளை தரக்கூடிய காலமாக இருக்கும். இப்போது கன்னி ராசிக்கு சென்றுள்ள செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆகவே சற்று அதிக கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். பேசும் போது வார்த்தைகளை கவனிக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பேச்சால் பல பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். யாரையும் இக்காலம் குறித்து விமர்சனம் செய்யாதீர்கள். குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயத்தால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சில கஷ்டங்களை சந்திக்கக்கூடும். கோபம் அதிகமாக வரும். இதன் விளைவாக பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆயினும் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் உடன்பிறந்தவர்களிடையே சண்டைகள் வரலாம். சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்களின் பேச்சுக்கள் மற்றவர்களை அதிகம் காயப்படுத்தும் என்பதால், பேசும் போது வார்த்தைகளை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications