Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்!
செவ்வாய் பெயர்ச்சியால் ஆகஸ்ட் 18 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப் போகுது..
Mars Transit In Virgo On August 2023: நவகிரகங்கள் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும். அப்படி மாறும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்லாம். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது செவ்வாய் சூரியனின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்குள் நுழைகிறார். கன்னி ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தின் படி, செவ்வாய்க்கும், புதனுக்கும் இடையே பகை உணர்வு உள்ளது.
இருப்பினும் கன்னி ராசிக்குள் செவ்வாய் செல்வதால், 3 ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதோடு, தொழிலில் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். மேலும் நிறைய பணத்தை சம்பாதித்து வெற்றி பெறுவீர்கள். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் அதிகம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும் வெற்றியும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும் மற்றும் அவர்களின் உதவியால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தல் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications