செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் அக்டோபர் வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது..

Mars Transit In Virgo On 18 August 2023: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், கோபம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் 2 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.

இந்த செவ்வாய் இதுவரை சூரியனின் சிம்ம ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, அதாவது இன்று புதனின் ராசியான கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார்.

Mars Transit In Virgo On 18 August 2023: Effects On All Zodiac Signs In Tamil

கன்னி ராசியில் நுழைந்த செவ்வாய், அந்த ராசியில் அக்டோபர் 3 ஆம் தேதி வரை இருந்து, பின் துலாம் ராசிக்குள் செல்வார். செவ்வாய் கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது கன்னி ராசிக்குள் நுழைந்த செவ்வாயால் அடுத்த 2 மாத காலம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். பல்வேறு மூலங்களில் இருந்து நல்ல பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் செலவழிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதலர்கள் மற்றும் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி இருக்கும். வாழ்க்கையில் சில தேவையற்ற தடைகள் இருக்கும். இதனால் பதட்டத்தை உணரலாம். இக்காலம் காதலிப்பவர்களுக்கு சாதகமாக இருக்காது. இக்காலத்தில் காதலர்கள் மற்றும் தம்பதிகளுக்கு இடையே தவறான புரிதல்களால் விரிசல் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அடிவயிற்று வலி மற்றும் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மிதுனம்

மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ வாய்ப்புக்கள் கிடைக்கும். காதலைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இரத்தம் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும்.

கடகம்

கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த ஆற்றலுடனும், தைரியத்துடனும் இருப்பார்கள். எப்பேற்பட்ட சவால்களையும் சமாளித்து வெற்றி பெறுவார்கள். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். இருப்பினும் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சு மற்றவர்களை காயப்படுத்தும். குடும்ப உறவுகளில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி வரும். பணியிடத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் எதிரிகள் உங்கள் இமேஜையும் உங்கள் கடின உழைப்பையும் கெடுக்க முயற்சி செய்யலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கோபத்தால் வாழ்க்கையே மோசமாக வாய்ப்புள்ளது. எனவே கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக சிறப்பாக இருக்காது. செலவுகளை கண்காணிக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. திருமண வாழ்க்கையில் கோபத்தால் சில பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மோசமாக இருக்கும். பணியிடத்தில் ஏதேனும் அவமானம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்காது. இம்மாதிரியான சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்து, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாவிட்டால், பிரச்சனை தீவிரமாகக்கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையிலும் நேரம் சாதகமாக இருக்கும். இருப்பினும், காதலர்களுக்கு நேரம் சாதகமாக இல்லை. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் அல்லது தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இக்காலம் சாதகமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் பல வெற்றிகளைக் காண்பார்கள். இருப்பினும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்காது. பணியிடத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பணம் தொடர்பான பிரச்சினைகளால் கவலைப்படக்கூடும். இருப்பினும், அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், முதலீடு செய்ய திட்டமிட்டால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வெற்றியை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பேச்சில் சிறப்புக் கட்டுப்பாட்டை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல், சோர்வு அல்லது உடல் வலி போன்ற பிரச்சினைகள் தொந்தரவு செய்யலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் முடிவுகளை எடுப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் இயல்பில் சில எதிர்மறை மாற்றங்களால் உறவில் கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் எந்த ஒரு வெற்றியையும் அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சவாலானதாக இருக்கும்.

மீனம்

மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சிலும் கோபத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில் வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் எந்தவிதமான வாக்குவாதத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, August 18, 2023, 20:51 [IST]
Desktop Bottom Promotion